×

வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி; முதல்முறையாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் விவிபாட் கொண்டு வரப்போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விவிபாட் முறையில் செய்யப்பட உள்ள மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்குப்பதிவின்போது விவிபாட் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது. இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, தேர்தல் ஆணையம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் புகார்கள் குறித்து மாநில தேர்தல் அதிகாரியே நடவடிக்கை -எடுக்கும் வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். எத்தனை கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தினாலும் திமுக சந்திக்க தயார் இவ்வாறு கூறினார்.

The post வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : R. S. Bharati ,Chennai ,Chief Election Commissioner ,India ,Rajiv Kumar ,Lok Sabha ,Dimuka ,
× RELATED தோல்வி பயம் வந்துவிட்டதால்தான்...